This content was written for tamiltechtree in 2015. the site is not available now. |
ஐபோன் 6S விமர்சனம்
சென்ற ஆண்டு ஐபோன் பெண்ட்கேட் சிக்கலுக்கு பிரகு வெளி ஆகும் ஐபோன் இது என்பதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான ஸ்மார்ட்போன் ஆகும்.
பென்ட்கேட் சிக்கலுக்கான தீர்வு மட்டுமல்ல வேறு பல முக்கியமான அப்டேட்களும் 6S ல் வந்துள்ளது. அது என்ன என்ன? பழைய 6 ஓனர்கள் அப்கிரேட் செய்யலாமா? என்பதை இந்த பதிவில் காணலாம்.
டிசைன்
டிசைனை பொறுத்தவரை, 6S சென்ற ஆண்டு 6ஐ ஒத்தே உள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், 6ல் இருந்து 6S ஐ பிரித்து காண்பிப்பது இரண்டே விசயங்கள் தான் – ஒன்று, புதிய ரோஸ் கோல்டு கலர், மற்றொன்று, 6S பின்னால் உள்ள 6S பேட்ஜ்.
சென்ற ஆண்டு ஏற்பட்ட பென்ட்கேட் சிக்கலை தீர்க்க, இந்த ஆண்டு 7000-சீரிஸ் அலுமினியம் பயன் படுத்த பட்டுள்ளது.
ஸ்பெக்ஸ்
வருடம் வருடம் புதிய போன்கள் சென்ற ஆண்டின் மாடல்களை விட மிக வேகமான பிராசஸர்கள் மற்றும் பெரிய கேமராக்கள் பெறுவது வாடிக்கை ஆகி விட்டது; ஆப்பிள் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
இந்த ஆண்டு 6S-ல் A9 டூயல்-கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிராசஸர் ஐபோன் 6S-ற்கு மின்னல் வேகத்தை குடுத்துள்ளது. ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு செல்வதும் சரி, புகைப்படம் எடுப்பதும் சரி, கண் இமைக்கும் நொடியில் நடந்துவிடும்.
6S-ல் இந்த ஆண்டு சற்றே சிறிய 1715 mah பேட்டரி குடுக்க பட்டுள்ளது. இருப்பினும், ஆப்பிள் தனது iOS9-ஐ பேட்டரியை திரன்பட சிக்கனமாக பயன்படுத்த வடிவமைத்துள்ளதால் சிறிய பேட்டரி பற்றிய கவலை வேண்டாம்.
3D டச்
ஐபோன் 6S-ல் 3D டச் என்ற புதிய அம்சத்தை ஆப்பிள் வழங்கி உள்ளது. இந்த 3D ட்ச் மூலம் நாம் ஒரு புகைப்படத்தையோ அல்லது ஒரு செயலியின் ஆப்சன் கலையோ உடனே பயன்படுத்த முடியும்.
தற்போதைக்கு 3D டச் அப்பிளின் சுய செயலிகளில் மட்டுமே உள்ளது. கூடிய விரைவில் பிற செயலிகளும் இந்த புதிய 3D டச் அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்பலாம்.
12mp கேமரா
சென்ற ஆண்டு ஐபோன்-6 உள்ள 8mp கேமரா மிகச்சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவியது.
6S-ல் உள்ள 12mp கேமரா சிறந்த புகைப்படங்களை மட்டும் அல்ல சிறந்த வீடியோக்களையும் எடுக்க உதவும். ஆம், தற்போது நீங்கள் 4K வில் வீடியோ எடுக்கலாம்.
12mp லென்ஸ் புகைப்படங்களில் உள்ள பொருளை மிக தெளிவாகவும் தத்ரூபமாகவும் காட்டுகிறது. மற்றொரு புது அம்சமாக, லைவ் போட்டோ என்ற ஒன்றை ஆப்பிள் தந்து உள்ளது. 3D டச் மூலம் நாம் புகைப்படத்தை அழுத்தினால் அந்த புகைப்படம் ஒரு சிறிய வீடியோ பதிவாக ஓடும். இந்த லைவ் போட்டோ அம்சம் நாம் நமது பழைய நினைவுகளை வண்ணம் மாறாமல் பார்த்து மகிழ உதவும்.
வாங்கலாமா?
இந்த ஆண்டு ஐபோன் பல ஆச்சரியங்களை தன்னுள் கொண்டுள்ளது. சில அம்சங்களான 3D டச் மற்றும் லைவ் போட்டோ OS அப்டேட் மூலம் பெறலாம் என்றாலும் 12mp கேமரா, மேம்படுத்த பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவற்றை பெற இந்த 6S-ஐ பெற்றுதான் ஆக வேண்டும்.
இந்த பகிர்வு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். தங்களின் மேலான கருத்துக்களை கீழே பகிரவும்.
Leave a Reply